Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவும் நூக்கலின் நன்மைகள் பற்றி பார்ப்போம் !!

Nookal
, வியாழன், 30 ஜூன் 2022 (15:36 IST)
நூக்கல் சற்று கடினமான காயாகும். எனவே இதனை நன்கு வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். இதில் வைட்டமின்களும், புரத சத்தும் நிறைந்துள்ளது.


நூக்கலை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது, நம் உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும். நூக்கலில் காலோரிகள் குறைவு, மேலும் உடல் எடை அதிகரிக்காது. நூக்கலில் வைட்டமின் ஏ, சி, இ, மாங்கனீசு, பீட்டாகரோட்டின் போன்றவை உள்ளன.

நூக்கலில் உள்ள அதிகப்படியான விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் தடுக்கிறது. நூக்கல் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக்கூடியது. இதன் விளைவால் கொலஸ்ட்ரால் குறைகிறது. நூல்கோலில் உள்ள ஃபோலேட்டும் இதயத்துக்கு நல்லது.

நூக்கல் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் குடல் நாளங்கள் உறுதிப்படும், மேலும் எலும்புகளும் உறுதியாகும். நூக்கலை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.

நூக்கலானது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். நூக்கலின் வேர்ப்பகுதிகளில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்புத் சக்தியையும் அதிகரிக்கிறது.

நூக்கலானது நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்யும். நூக்கலின் கீரையில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளது. அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

நூக்கல் ஜீரண சக்தியை அதிகரிக்கும். நூக்கலானது நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும் குணம் இதற்கு உண்டு. மேலும் வயிற்று பிரச்சனைகளுக்கும், வயிற்றுப்புண்களுக்கும் காரணமான பாக்டீரியாவை எதிர்த்து போராட கூடியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிம்மதியான தூக்கம் வர உதவும் சூரிய முத்திரை !!