பயன்தரும் சமையல் அறை குறிப்புகள் பற்றி பார்ப்போம்....!!

Webdunia
வெண்டைக்காயின் காம்பையும், தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.
வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
 
எலுமிச்சம் பழத்தை நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமலும் கெட்டுப்  போகாமலும் இருக்கும்.
 
கறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஈர அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல் இருக்கும்.
 
ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகிக்க வேண்டும்.
 
மழை நீரில் பருப்பு வகைகளை வேகவைத்தால் ஒரு கொதியில் வெந்துவிடும். ருசியும் அதிகரிக்கும்.
 
எலுமிச்சம்பழம் உலர்ந்துவிட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.
 
தேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.
 
நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.
 
கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
 
காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்துவிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

இதெல்லாம் நடந்தா நீங்க ஆரோக்யமா இருக்கீங்க!.. வியப்பூட்டும் உடல் அறிகுறிகள்!...

சிக்கன்.. மட்டன்.. என்னென்ன சத்துக்கள்?.. என்ன வித்தியாசம்?. வாங்க பார்ப்போம்..

பற்களை பாதுகாக்க சில டிப்ஸ்!. இத மட்டும் செஞ்சி பாருங்க!..

உங்கள் குழந்தைகள் செல்போன் பார்ப்பதால் வரும் ஆபத்து!..

அடுத்த கட்டுரையில்
Show comments