Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருந்தாக பயன்படும் வெட்டிவேரை பற்றி தெரிந்துகொள்வோம்...!!

மருந்தாக பயன்படும் வெட்டிவேரை பற்றி தெரிந்துகொள்வோம்...!!
வெட்டிவேர் என்பது மிகவும் பழமை மிகுந்த மூலிகை பொருளாகும். வாசனை திரவியங்கள் செய்யவும், உணவு மற்றும் சில பானங்கள் செய்யும்  பயன்படுத்தப்படுகிறது.

காய்ச்சல் வந்த பின்பு உடலில் வலியும், சோர்வும் அதிகமாக இருக்கும். இதனை நீக்க வெட்டி வேரை நீரில் போட்டு, கொதிக்க வைத்து, வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் உடல் சோர்வும் உடல், வலியும் நீங்கும். இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் ஜீரண சக்தியும் அதிகரிக்கும். வயிற்றுப்புண்ணும் குணமடையும். 
 
இது மிகுந்த குளிச்சியை தரும். மண்வீடுகளில் கூரையாக கூட இதனை பயன்படுத்துவர். மெத்தைகளில் திணிப்பாக இதனை பயன்படுத்தலாம். கதவுகளிலும், ஜன்னல்களிலும் திரைகளாக பயன்படுத்தலாம். இதன்மூலம் அந்த இடம் குளிர்ச்சியை அடைகிறது. இதன் நறுமணம் அந்த இடத்தை ஆக்கிரமிக்கும். இதனால்  பூச்சிகள் அந்த இடத்தில் இருக்காது.
 
வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த நீரை குடிப்பதன் மூலம் உடல் சூடு குறைகிறது. உடலில் உட்புறமும் வெளிப்புறமும் தூய்மை அடைகிறது. சருமம்  பாதுகாக்கப்படுகிறது.
 
வெட்டிவேரின் குளிர்ச்சியான தன்மை, உடலின் வீக்கத்தை குறைக்கிறது. நரம்பு மண்டலம் மற்றும் சுழற்சி மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தை நீக்குவதில் முக்கிய  பங்கு வகிக்கிறது. பக்கவாதம், வயிற்றுப்போக்கு போன்றவற்றால் ஏற்படும் அழற்சிக்கு இது ஒரு சிறந்த சிகிச்சை பொருளாகும்.
 
வெட்டிவேரில் இருக்கும் சிக்காட்ரிஷன்ட் என்னும் ஏஜென்ட் உடலில் வடுக்கள் மறைவதை துரிதப்படுத்துகிறது. வடுக்கள் ஏற்பட்ட இடத்தில் புதிய திசுக்கள்  வளர்ந்து இறந்த திசுக்களை மாற்றி அமைகிறது.
 
உடலின் எல்லா இடங்களும் ஒரே சீராக இருக்க செய்கிறது. பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் ஏற்படும் வரி தழும்புகள், கொழுப்பு பிளவுகள், அம்மைக்கு  பிறகு ஏற்படும் தழும்புகள், தீக்காயங்கள் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீரிழிவு நோய்க்கான சில வீட்டு வைத்திய குறிப்புகள்...!!