Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிக புத்துணர்ச்சியை அளிக்க கூடிய லெமன் டீ !!

அதிக புத்துணர்ச்சியை அளிக்க கூடிய லெமன் டீ !!
பால் டீயை விட க்ரீன் டீ, பிளாக் டீ மற்றும் லெமன் டீ போன்றவைகள் சமீபகாலமாக பிரபலமாகி வருகின்றன. இவற்றில் லெமன் டீ அதிக புத்துணர்ச்சியை அளிக்க கூடியது, பிளாக் டீயில் சிறிது லெமன் துளிகளை விட்டால் அதன் சுவையே மாறிவிடும்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் டீயைக் கலந்து, சிறிது நேரம் கழித்து அதில் லெமன் துளிகளையும் கலந்து, பின் சர்க்கரை அல்லது தேனைச் சேர்த்துக்  கொண்டால் சுவையான லெமன் டீ தயார். 
 
தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கப் லெமன் டீயைக் குடித்து வந்தால், அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். நாம் சாப்பிட்ட சாப்பாடு நன்றாக  செரிமானம் ஆவதற்கு லெமன் டீ உதவுகிறது, மூளை நரம்புகளையும் வலுவாக்குகிறது.
 
சில நேரங்களில் நமக்கு தலைவலிக்கும் அந்த சமயத்தில் லெமன் டீ குடித்தால் சரியாகிவிடும். இது மன அழுத்தத்தை போக்கி நம்மை உற்சாகத்துடன் செயல்பட  துணைபுரிகின்றது.
 
இன்சுலின் குறைவை நிவர்த்தி செய்வதில் லெமன் டீ உதவுகிறது, ஆனால் நீரிழிவு உடையவர்களுக்கு இதுவே மருந்து என்று சொல்ல முடியாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சளி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சித்தரத்தை !!