Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் உள்ள வெண்டைக்காய் !!

Advertiesment
சத்துக்கள்
, சனி, 5 மார்ச் 2022 (10:37 IST)
வெண்டைக்காயில் உள்ள அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்து கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் மிகவும் குறைவு.


கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது போலிக் அமிலம், இது வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு தடுக்கப்படுகிறது. பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்கு உண்டு.

நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

வெண்டைக்காய் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்கு செயல்பட தொடங்கும். வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏற்படும் பசி உணர்வை கட்டுபடுத்தும். வெண்டைகாய் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும், மேலும் உடலின் எடையும் சீக்கிரமாக குறையும்.

வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் ஊறவைத்த நீரைப் குடித்தால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளால் ஏற்படும் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜீரண கோளாறுகளை நீக்கும் சௌசௌ !!