Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண் சம்பந்தமான பிரச்சினைகள் குணமாக்கும் கமலா ஆரஞ்சு !!

Advertiesment
Kamala Orange 1
, வெள்ளி, 17 ஜூன் 2022 (13:07 IST)
கமலா ஆரஞ்சு மிகக் குறைவான அளவு கலோரி கொண்ட பழமாக இருந்தாலும் உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை தரக் கூடியதாக உள்ளது. அவை கொலஸ்ட்ராலை கட்டுப் படுத்துகிறது.


இந்த வகை ஆரஞ்சு பழத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.

இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக உள்ள கொலஸ்ட்ராலை கரைத்து வெளியேற்றுவதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவு சீராக இருக்க உதவுகிறது.

உடலில் பொட்டாசியம் சத்து குறையும் போதுதான் இதய சம்பந்தமான பிரச்சினைகள் தோன்ற ஆரம்பிகின்றன. கமலா ஆரஞ்சில் உள்ள பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து இதய சுவர்களை பலப் படுத்துவதன் மூலம் இதயத்தை பாத்துக்காக்கிறது.

கண் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட்டுவர இதில் இருக்கக்கூடிய கரோட்டினாய்டுகள் என்னும் வேதிப்பொருள் விட்டமின் ஏ சத்தாக மாறி கண் சம்பந்தமான பிரச்சினைகள் குணமாகும்.

கமலா ஆரஞ்சில் விட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி உடலில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

அடிக்கடி சளி காய்ச்சல் போன்ற பிரச்சனையால் பாதிக்கப் படுபவர்கள் கமலா ஆரஞ்சு காயை சாப்பிட்டு வர பலன் கிடைக்கும்.

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் கமலா ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வர அதில் இருக்க கூடிய நார் சத்து குடலியக்கத்தை சீராக்கி மலம் எழுதில் வெளியேற உதவி செய்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல்வேறு நோய்களை போக்கும் அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த அதிமதுரம் !!