Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல்வேறு நோய்களை போக்கும் அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த அதிமதுரம் !!

Athimadhuram
, வெள்ளி, 17 ஜூன் 2022 (12:17 IST)
அதிமதுரத்தின் வேர்களே மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. அதி + மதுரம் = அதிமதுரம். மிகுந்த இனிப்புச் சுவை உடைய மூலிகை என்பது இதன் பொருள்.


அதிமதுரத்தின் வேர்கள் மிகுந்த இனிப்புச் சுவை கொண்டவை, மற்றும் குளிர்ச்சி தன்மை உடையவை. அதிமதுரம் இரண்டு வகைப்படும். அவை, சீமை அதிமதுரம், மற்றும் நாட்டு அதிமதுரம் போன்றவையாகும்.

சீமை அதிமதுரம் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இது வங்கதேசம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகிறது. நாட்டு அதிமதுரம் சிறிதாகவும், விரல் பருமனாகவும், ஒடித்தால் வெண்மையாகவும், சிறிது இனிப்பு மற்றும் வழவழப்பாகவும் இருக்கும். இதை ‘குன்றிமணி வேர்’ என்றும் அழைப்பார்கள்.

இனிப்புச் சுவையும், குளிர்ச்சி தன்மையும் கொண்டது அதிமதுரம். கண் நோய்கள், எலும்பு நோய்கள், மஞ்சள் காமாலை, இருமல், சளி, தலைவலி, புண் போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது அதிமதுர வேர். காக்கை வலிப்பு, மூக்கில் ரத்தம் வடிதல், படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும். நரம்புத் தளர்ச்சி மற்றும் ஆண்மைக் குறைவுப் பிரச்சனைக்கும் அதிமதுரம் மருந்தாகப் பயன்படுகிறது.

அதிமதுரம் அஷ்டி, குன்றிவேர், இரட்டிப்பு மதுரம், அதிங்கம் போன்ற பெயர்களிலும் அழைக்கபடுகிறது. அதிமதுரப் பொடியை வெல்லத்துடன் தண்ணீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். திராட்சை, அதிமதுரம் இவற்றின் கஷாயத்துடன் காய்ச்சிய பாலைப் பருகச் செய்தால், சிறுநீரத் தடையால் தோன்றிய வயிறு உப்புசம், வயிற்று பெருமல் போன்றவை நீங்கும்.

தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, வறட்டு இருமலை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தி சுத்தமாக்கும் தன்மை கொண்டது அதிமதுரம்.

அதிமதுரத்தின் வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடித்து வந்தால் தொண்டைப்புண் குணமாகும். அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தால் வாய்ப்புண்கள் ஆறும்.

அதிமதுரம், மற்றும் தேவதாரம் இவைகள் வகைக்கு ஒன்றாக 35 கிராம் அளவு எடுத்து அதை பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். மேலும் பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்களும் நிவர்த்தியாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடி வளர்ச்சி மற்றும் சரும நிறத்தை இயற்கையான முறையில் அழகாக்க சில டிப்ஸ் !!