Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லதா...?

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (09:53 IST)
முழு கோதுமை பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும். பெரும்பாலான தானியங்களைப் போலவே, அதில் உள்ள சத்துக்களின் அளவு அது வளர்ந்த மண் மற்றும் சூழ்நிலைகளை பொறுத்து மாறுகிறது.


செலினியம் சத்து பல்வேறு அத்தியாவசிய உடல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறதுகோதுமையின் உள்ள செலினியம் அளவு மண்ணைப் பொறுது மாறுபாடுவதால் சீனா போன்ற நாடுகளில் விளையும் கோதுமையில் உள்ள செலனியம் அளவு குறைவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

கோதுமை மாவில் வைட்டமின் பி 9 உள்ளது. கர்ப்ப காலத்தில் இது மிகவும் முக்கியமானது. கோதுமையின் பல சத்தான பகுதிகள் அவை சுத்திகரிப்பு செய்யப்படும் போது நீக்கப் படுகின்றன. எனவே, முழு தானிய கோதுமையுடன் ஒப்பிடும்போது வெள்ளை கோதுமையில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைந்த அளவே உள்ளன.

நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படும் கோதுமை !!

உலகில் பெரும்பான்மையான மக்கள் கோதுமையை முக்கிய உணவாக கொண்டிருப்பதால் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் செறிவூட்டப்படுவது அவசிமாகிறது.


வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம. கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும். கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.

சம்பா கோதுமையை சாப்பிடும்போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவு கணிசமாக குறைகிறது. மேலும் மொத்த கொழுப்பு சத்து அளவு மற்றும் ட்ரைகிளிசரைட் அளவும் கணிசமாக குறைகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments