Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சித்த வைத்தியத்தில் சீந்தில் கொடியின் முக்கியத்துவம்

Advertiesment
சித்த வைத்தியத்தில் சீந்தில் கொடியின் முக்கியத்துவம்
பெண்களை அதிகமாக தாக்கக்கூடிய மார்பக புற்றுநோயிலிருந்து பெண்களை காப்பாற்றும் அரிய வகை மூலிகை செடிதான் சீந்தில் கொடி என்று அழைக்கப்படும் வஞ்சிக் கொடியாகும். சித்த வைத்தியத்தில் வஞ்சிக் கொடி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வஞ்சிக்கொடி சர்க்கரை நோயாளிகளுக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் நல்ல மருந்து என்று அகத்திய முனிவர் அன்றே எழுதி வைத்திருக்கிறார். சீந்தில்  கொடிகளை நன்றாக காயவைத்து பொடி செய்து காலை மாலை அரை தேக்கரண்டி பாலுடன் சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல பலத்தை தரும்.
 
சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து. சிறுநீரக செயல் இழப்பு, ஆண்மைத்தன்மை குன்றுதல், கல்லீரல் கோளாறு ஆகிய நோய்களுக்கு  கொடுக்கப்படுகிறது. மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் சீதபேதியை குணமாக்கும். வெட்டை நோயை விரட்டும். இந்திரியம் தானாக வெளியேறுவதை தடுக்கும்.
webdunia
சீந்தில் சர்க்கரை, கல்லீரல், மண்ணீரல் ஆகிய உறுப்புகளை பலமடைய செய்யும். பிற மருந்தின் சேர்க்கையுடன் நீரிழிவு, காமாலை, சோகை, வீக்கம், இருமல்,  கபம், சளி, வாந்தி, மூர்ச்சை ஆகிய நோய்களை தீர்க்கலாம்.
 
இலை, தண்டு, வேர் அனைத்தும் மருந்தாகிப் பயன்தரக்கூடிய குணம் கொண்டது சீந்தில். செரிமானமின்மை, வலி, சோர்வு ஆகியவற்றை குணமாக்கும்  தன்மையுடையது. தாது விருத்தியை உண்டாக்கக்கூடியது. விட்டுவிட்டு வந்து துன்பம் செய்யும் காய்ச்சலைத் தீர்க்கக் கூடியது. வீக்கத்தைக் கரைக்கக்கூடியது. மூட்டு வலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடியது. ரத்தத்தின் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியது. கல்லீரலைப் பலப்படுத்தக் கூடியது. உடல்  தேற்றியாக விளங்குவது. காம உணர்வைத் தூண்டக் கூடியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொண்டைக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்