Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுளுக்கு ஏற்பட்டால் விரைவில் நீங்க இதை செய்து பாருங்க...!

Advertiesment
சுளுக்கு ஏற்பட்டால் விரைவில் நீங்க இதை செய்து பாருங்க...!
சுளுக்கு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் ஏற்படுகிறது. நரம்புகளின் தசை நார்கள் லேசாக பாதிக்கப்பட்டால் அவை சாதாரண சுளுக்கு. தசை நார்கள் கிழிவது, நரம்புகள் பாதிக்கப்படுவது போன்றவை கடினமான சுளுக்கு ஆகும்.
பூண்டை உரித்து எடுத்து அதோடு சிறிது உப்பு சேர்த்து இரண்டையும் நன்கு இடித்து சுளுக்கு உள்ள இடத்தில் பற்று போட்டால் விரைவில்  சுளுக்கு சரியாகும்.
 
ஆமணக்கு எண்ணெயில் ரிசினோலெயிக் அமிலத்தின் இருப்பு அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது இது சுளுக்கு காரணமாக வீக்கம் மற்றும்  வலிக்கு நிவாரணம் வழங்க உதவுகிறது. ஆமணக்கு எண்ணெய் மூட்டு வலிக்குக் கூட ஒரு சிறந்த தீர்வு ஆகும். 
webdunia
பாதிக்கப் பட்ட இடத்தை சிறுது ஆமணக்கு எண்ணெய்யால் மசாஜ் செய்து அந்த இடத்தை க்ரேப் கட்டு கொண்டு சுற்றி வைக்கவும். இதை ஒரு நாளைக்கு, நீங்கள் வலி இல்லாமல் உணரும் வரை 2-3 தடவைகள் செய்யவும்.
 
சுளுக்கு நீங்க ஜாதிக்காய் பெரிதும் உதவுகிறது. ஜாதிக்காயை உடைத்து அதோடு சிறிது பால் சேர்த்து நன்கு அரைத்து, அதனை வெதுவெதுபாக சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போடவேண்டும். இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் பற்று போட்டால் சுளுக்கு நீங்கும்.
 
பிரண்டையை நன்கு பிழிந்து சாறு எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள் மற்றும் உப்பை சேர்த்து நன்கு காய்ச்சவேண்டும். பிறகு அதை இதமான சூட்டில் சுளுக்கு உள்ள இடத்தில் தடவி வந்தால் சுளுக்கு நீங்கும்.
 
முருங்கை பட்டையோடு பெருங்காயம், கடுகு மற்றும் சுக்கை சேர்த்து நன்கு அரைத்து சூடு செய்து இதமான சூட்டில் சுளுக்கு உள்ள உடத்தில்  தடவி பற்று போட்டால் சுளுக்கு நீங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாழைப்பழத்தை வைத்து சருமத்தை அழகாக்குவது எப்படி...?