Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முகத்தில் வழியும் எண்ணெய்யை கட்டுப்படுத்த வழிகள்!!

Advertiesment
முகத்தில் வழியும் எண்ணெய்யை கட்டுப்படுத்த வழிகள்!!
ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட சரும அமைப்பு இருக்கும். ஆனால், அவற்றில் எண்ணெய் பசை உள்ள சருமம் தான் பராமரிப்பதற்கு மிகவும் கடினமானது. ஏனென்றால், இந்த சருமத்திற்கு மிகப் பெரிய பிரச்சனை என்றால் அது அதிகப்படியான பருக்கள் ஏற்படுவது மற்றும் சரும  வறட்சி ஏற்படுவதும் தான்.
எண்ணெய் பசை உள்ள சருமம் உள்ளவர்கள் நிச்சயமாக சரும பராமரிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்பொழுது தான் சருமத்தில் பரு ஏற்படுவதைத் தடுக்க முடியும். 
 
தயிருடன், 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, முகம், கழுத்து, கை, கால்களில் தடவி நன்கு காயவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
webdunia
இதனால் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்பட்டு, ப்ளீச்சிங் செய்த தோற்றத்தைக் கொடுக்கும். இந்த முறையை தொடர்ந்து செய்து வர எண்ணெய் பசை நீங்கும்.
 
முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க, பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனால் பப்பாளி சருமத்துளைகளை ஆழமாக சுத்தம் செய்வதோடு, எண்ணெய் சுரப்பையும் சரிசெய்ய உதவும்.
 
முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க, முல்தானிமெட்டி. இதில் அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்கி முகத்திற்கு நல்ல பொழிவைக் கொடுக்கும். எனவே, முல்தானிமெட்டியை பேஸ் மாஸ்க்காக போட்டு உங்கள்  அழகை மேம்படுத்துங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இத்தனை நோய்களுக்கும் இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்...!