Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேங்காய் எண்ணெய்யை எவ்வாறு பயன்படுத்துவதால் பலன்கள் உண்டு...?

Advertiesment
தேங்காய் எண்ணெய்யை எவ்வாறு பயன்படுத்துவதால் பலன்கள் உண்டு...?
மலச்சிக்கல் பிரச்சினையிலும் தேங்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் தேங்காயில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. அதனால்  மலச்சிக்கலை போக்கும்.

வயிற்றில் பூச்சிகள் இருந்தால், இரவில் தூங்குவதற்கு முன்னும், காலையில் ஒரு ஸ்பூன் தேங்காயை எடுத்துக்கொண்டால், பூச்சிகள் இறக்கின்றன. தேங்காய் ஒரு நல்ல ஆண்டிபயாடிக். இது உங்களை அனைத்து வகையான அலர்ஜியில் இருந்தும் பாதுகாக்கிறது.
 
தேங்காய் எண்ணெய் நல்ல சன்ஸ்கிரீன். வெயிலில் வெளியே செல்வதற்கு முன் இதை தடவிக் கொண்டால் போதும். விலையுயர்ந்த சன்ஸ்கிரீன் எதுவும் தேவையில்லை. தினமும் அதிகாலையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் உட்கொண்டால் அல்சீமர் நோய் குணமடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
தேங்காய் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இது நோய்களுக்கு எதிராக போராடும் திறனை அதிகரிக்கும். கொரோனா காலமாக இருப்பதால் அதிலிருந்து தப்பிக்க தேங்காய் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
 
உடல் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்திருக்க தேங்காய் மிகவும் உதவுகிறது. தேங்காயில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இதில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் உடலின் ஈரப்பதத்தையும் பாதுகாக்கிறது. தேங்காயுடன், அதன் எண்ணெயும் மிகவும் அற்புதமானத பலன்கள் கொண்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முருங்கை கீரையில் உள்ள சத்துக்கள் என்ன...?