மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)
கிரக நிலை:
தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் புதன்(வ) - லாப ஸ்தானத்தில் கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
08-10-2020 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-10-2020 அன்று மாலை 4.56 மணிக்கு சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-10-2020 அன்று மாலை 6.15 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-10-2020 அன்று காலை 8.19 மணிக்கு செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
அதிர்ஷ்டத்தை விட உழைப்பையே அதிகமாக நம்பும் மகர ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சனைகள் தீரும்.
குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள். சுயகௌரவரம் இருக்கும்.
தொழில் லாபம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நன்மையைத் தரும்.
பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும்.
கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு சக கலைஞர்கள் பொறாமை கொள்வார்கள். கடன் பிரச்சனை தீரும். செல்வநிலை உயரும். இறுக்கமான சூழ்நிலை மாறும்.
அரசியல் துறையினருக்கு சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும்.
மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தடைப்படும். பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலப்பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் சுமாரானமுறையில் நடைபெறும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள்.
திருவோணம்:
இந்த மாதம் உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச்செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். மனைவி, பிள்ளைகள்வழியிலும் நிம்மதியற்ற நிலையே நீடிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் நிம்மதியற்ற நிலைகளை சந்திப்பார்கள்.
அவிட்டம் 1,2 பாதங்கள்:
இந்த மாதம் பொருளாதாரநிலையிலும் தடைகள் ஏற்படும் என்பதால் எல்லாவகையிலும் முடக்கங்கள் உண்டாகும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும். எடுக்கும் காரியங்களிலும் எவ்வளவுதான் பாடுபட்டாலும் அதற்கேற்ற முழுப்பலனை அடையமுடியாது.
பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ண பகவானை பிராத்தனை செய்து வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8