Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முடி உதிர்வை தடுக்கும் கற்றாழை எண்ணெய் வீட்டிலேயே எவ்வாறு தயாரிப்பது...?

Advertiesment
முடி உதிர்வை தடுக்கும் கற்றாழை எண்ணெய் வீட்டிலேயே எவ்வாறு தயாரிப்பது...?
தலைமுடி அதிகம் உதிரும் பிரச்சனை உள்ளவர்கள், கற்றாழை ஜெல்லைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.
கற்றாழை ஜெல்லை நேரடியாகவோ அல்லது அதனைக் கொண்டு எண்ணெய் தயாரித்தோ பயன்படுத்தலாம். ஆனால் கற்றாழை எண்ணெய் தயாரித்து வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், மூன்றே மாதங்களில் தலைமுடி நன்கு வளர்ந்திருப்பதைக் காணலாம்.
 
உங்களுக்கு கற்றாழை எண்ணெயை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம். 
 
தேவையான பொருட்கள்: கற்றாழை இலை - 2, தேங்காய் எண்ணெய் - 50 மிலி.
 
செய்முறை: முதலில் கற்றாழை இலையை தோல் சீவி உள்ளே உள்ள ஜெல்லை தனியாக எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படி எடுக்கும்போது அதில் உள்ள  மஞ்சள் நிற பகுதியை தப்பித்தவறியும் எடுத்துவிட வேண்டாம்.
 
ஒரு பௌலில் கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து, 3 நாட்கள் ஊற வைக்க வேண்டும். பின்பு ஊற வைத்துள்ள  கற்றாழை ஜெல் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, குறைவான தீயில் 10-15 நிமிடம் நன்கு கிளறி விட்டு சூடேற்றி, ஒரு பதத்திற்கு வந்ததும் இறக்கி குளிர  வைத்து, வடிகட்டினால், கற்றாழை எண்ணெய் தயார்.
webdunia
பயன்படுத்தும் முறை: கற்றாழை எண்ணெயை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்து சுமார் அரை மணி நேரம் ஊறவைத்து, மைல்டு  ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி செய்வதால், மயிர்கால்கள் ஊட்டம் பெற்று வலிமையடைந்து, முடியின் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரமலான் ஸ்பெஷல் உணவுகள் செய்ய....!