1. சிக்கன் 65
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ சிறியதாக நறுக்கியது
தயிர் - 1/2 கப்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கன் துண்டுகள் நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தயிர் அல்லது எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் சோள மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், அரிசி மாவு, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை, சோள மாவு கலவையில் சேர்த்து கலந்து, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். சுவையான சிக்கன் 65 தயார்.
தேவையான பொருட்கள்:
பெரிய கத்தரிக்காய் - 5
தக்காளி - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 2 பெரியது
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரைப்பதற்காக சீரகம், வெந்தயம், வேர்க்கடலை அனைத்தையும் லேசாக வறுத்து ஆறவைத்து அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு பிறகு வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி நறுக்கிய கத்தரிக்காயை சேர்த்து கிளறவும். சிறிது நேரம் வதங்கியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத் தூள் போட்டு அரத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்க்கவும். கொதித்தவுடன் புளி கரைசல் சேர்த்து சுருண்டு வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான கத்தரிக்காய் மாசாலா தயார். இவை பிரியாணியுடன் சாப்பிட சிறந்தது. அனைத்து விஷேங்களுக்கும் இவை பிரியாணியுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.