Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெந்தயத்தை எப்படி சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் தெரியுமா...?

Advertiesment
வெந்தயத்தை எப்படி சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் தெரியுமா...?
இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் வரக்கூடிய முக்கியமான ஒரு பிரச்சனை சர்க்கரை நோய். ஆரம்ப காலங்களில் இந்த சர்க்கரை நோயை பணக்காரர்கள் நோய் என சொன்னார்கள். தற்பொழுது சர்க்கரை நோயை ஒரு குறைபாடு என சொல்கிறார்கள்.


இந்த குறைபாட்டிற்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என சொல்கிறார்கள். உண்மையில் ஒரு நோய்க்கு நம்முடைய வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டுமா. இந்த சர்க்கரை நோயானது பரம்பரை காரணமாகவும்  வரும்.
 
சாதாரணமாகவே சர்க்கரை நோய் வருபவர்களுக்கு அவர்களுடைய உடல்நிலையில் பல மாற்றங்கள் ஏற்படும். மிகவும் சோர்வுடன் காணப்படும். அடிக்கடி நாவறட்சி ஏற்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.
 
வெந்தயம் சர்க்கரை நோயை மிக வேகமாக கட்டுக்குள் வைக்கிறது. இந்த வெந்தயத்தை சாப்பிடுகிற அனைவருக்குமே சர்க்கரை நோய் குறைகிறது அல்லது தீர்ந்து  விடுகிறது என்று சொல்லலாம். இந்த வெந்தயத்தை நாம் எப்படி சாப்பிட்டால் நமக்கு சர்க்கரை நோயை குறைக்கும் என்பதை பார்ப்போம்
 
சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் காலையில் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தாலே போதும். அவர்களுடைய சர்க்கரை நோய் விரைவில் கட்டுக்குள்  வந்துவிடும். இதற்கு நீங்கள் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை 100 மில்லி அளவிற்கு தண்ணீர் எடுத்து அதில் இரவில் தூங்கும்பொழுது இந்த வெந்தயத்தை ஊற  வைத்துவிட்டு மறுநாள் காலையில் அந்த வெந்தயத்தை எடுத்து அப்படியே சாப்பிட்டால் போதும்.
 
தொடர்ந்து இதை நீங்கள் செய்து வரும் பொழுது உங்களுடைய உடலில் உள்ள சர்க்கரையின் அளவு மிக வேகமாக குறையும். அதுபோல முளைக்கட்டிய  வெந்தயத்தையும் நீங்கள் தினமும் காலையில் சாப்பிட்டு வரும் பொழுது உங்களுடைய சர்க்கரை நோயின் தீவிரம் குறையும்.
 
ஏனென்றால் இந்த முளைக்கட்டிய வெந்தயத்தில் பாலிசக்கரைடு அதிகம் உள்ளது. இது அதிகமாக சாப்பிட்ட உணர்வைத் தருகிறது. இதனால் அதிகமாக சாப்பிடுவதும் தவிர்க்கப்படும். அதோடு முளைகட்டிய வெந்தயத்தில் 75 சதவிகிதம் கரையக்கூடிய நார்ச்சத்து இருக்கிறது.
 
இதனால் முளைகட்டிய வெந்தயத்தை நீங்கள் தினமும் சாப்பிட்டு வரும் பொழுது சர்க்கரை நோயின் தீவிரம் குறைந்து விரைவில் கட்டுக்குள் வரும். ஆகையால்சர்க்கரை நோயை கண்டு பயப்படாமல் சித்த மருத்துவர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று வெந்தயத்தையும் குடித்து வாருங்கள். சர்க்கரை நோய் உங்கள்  கட்டுக்குள் வரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புது அவதாரம் எடுக்கிறது கொரோனா... நடிகை ஸ்ரீ திவ்யா எச்சரிக்கை!