Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புது அவதாரம் எடுக்கிறது கொரோனா... நடிகை ஸ்ரீ திவ்யா எச்சரிக்கை!

Advertiesment
புது அவதாரம் எடுக்கிறது கொரோனா... நடிகை ஸ்ரீ திவ்யா எச்சரிக்கை!
, செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (08:50 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட பல்வேறு     நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் இந்திய உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே செல்வதால் மக்கள் பலரும் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதற்காக ஒவ்வ்வொரு தனி நபரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்து வருகின்றது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை ஸ்ரீதிவ்யா "கோவிட்19 புதிய அவதாரம்  எடுக்கிறது! எல்லோரும் தயவுசெய்து பத்திரமாக சமூக விலகலை பின்பற்றி வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். இதனை யாரும் விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.     மற்றும் அந்தந்த மாநில அரசுகள் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்! என்று எச்சரித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரைவில் குயின் 2... கெளதம் மேனனின் பதிலால் ரசிகர்கள் ஆர்வம்!