Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்க்கரை உடலுக்கு எவ்விதம் தீங்கு விளைவிக்கிறது...?

சர்க்கரை உடலுக்கு எவ்விதம் தீங்கு விளைவிக்கிறது...?
சர்க்கரை ஒரு எளிமையான கார்போஹைட்ரேட் ஆகும். இது இரசாயன தொடர்புடைய ஒரு வகை இனிப்பு-ருசி கொண்ட பொருள் ஆகும். பல வடிவங்களில் கிடைக்கிறது.


சுக்ரோஸ், லாக்டோஸ், மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரை மூன்று முக்கிய வகைகள் உள்ளன.
 
தேன், பழங்கள், காய்கறிகள், பழச்சாறுகள், பால் போன்ற இயற்கையானா உணவுகளில் இருக்கும் சர்க்கரை உடலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காது. சர்க்கரை ஒரு டீஸ்பூன் சுமார் 4 கிராம் அளவு உள்ளது.  
 
சமீபத்திய ஆய்வில் அதிக சர்க்கரை மற்றும்  செயற்கை இனிப்பு சோடா சாப்பிடுவது உடல் பருமனுடன் தொடர்புடையது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
 
இதய நோய்: செயற்கையான சர்க்கரை உட்கொள்வதல் இதய நோய்கள் மூலம் மரணம் ஏற்பட கூட வாய்ப்பு உள்ளது.
 
சர்க்கரை உட்கொள்வதால் நீரழிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதில்லை. சராசரியை விட அதிக சர்க்கரை எடுத்துக்கொள்ளும் நபர்கள் அதிக எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள், இதுவே வகை 2 நீரிழிவுக்கான காரணியாக உள்ளது.
 
சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் சுகர் ஃப்ரீ கூட உடல் நலத்துக்கு நல்லதல்ல. இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் புற்று நோய் ஏற்படும் அபாயமுண்டு.
 
தற்போது இயற்கையிலிருந்து எல்லாமே செயற்கையாக மாறிவரும் சூழ்நிலையில், மீண்டும் மக்கள் பாரம்பரிய உணவுகளை நாடி படையெடுக்கத் தொடங்கி விட்டார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ந்து 20 ஆயிரத்திற்கும் கீழ் தினசரி பாதிப்பு! – நம்பிக்கை அளிக்கும் இந்திய நிலவரம்!