Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆகாசகருடன் கிழங்கின் அற்புத மருத்துவ பயன்கள் !!

Advertiesment
ஆகாசகருடன் கிழங்கின் அற்புத மருத்துவ பயன்கள் !!
ஆகாசகருடன் ஒரு வகை கிழங்கு இனத்தைச் சார்ந்த தாவர வகையாகும். இவற்றிலிருந்து கொடிகள் படர்ந்து பற்றி வளரக்கூடியாது. அதீத கசப்பை கொண்ட இந்த கிழங்கு சித்தர்களால் போற்றி பாராட்டப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான வீடுகளில் இந்த கிழங்கை திருஷ்டிக்காக வீடுகளில் கட்டி தொங்க விடுவதை வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
 
சித்த மருத்துவத்தில் இந்த கிழங்கை பாம்புக்கடி, பூச்சிக்கடி, தோல் நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுத்துகின்றனர். ஒருவருக்கு பாம்பு கடித்து விட்டால் சிறிய அளவு இதனை உட்கொள்வதால் உடனடியாக வாந்தி, பேதி உண்டாகி விஷம் முறிந்து வெளியேறிவிடும். 
 
பூரான், பூச்சி போன்றவற்றின் கடியிலிருந்தும் மனிதனை உடனடியாக மீட்கிறது. நவீன காலத்தில் நிலவும் மிகக்கொடிய நோய்கள் பலவற்றிற்கும் அற்புத மருந்தாக செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. 
 
மிகச்சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. இதன் தன்மை அறிந்து தான் சித்தர்கள் மகா மூலி என்று குறிப்பிட்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது.
 
ஆகாய கருடன் கிழங்கின் இலையைக் கொண்டு வந்து வெய்யிலில் சறுகு போல உலர்த்தி எடுத்து, உரலில் போட்டு இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, சொறி, சிரங்கு, ஆறாத புண், குழந்தைகளுக்குத் தோன்றும் அக்கி, கரப்பான் புண், சிரங்கு இவைகளுக்கு இந்தத் தூளுடன் தேங்காயெண்ணைய் சேர்த்து, குறிப்பிட்ட புண்களைக் கழுவி விட்டு மேலே தடவி வந்தால் மூன்றே நாட்களில் மறைந்து விடும்.
 
100 கிராம் ஆகாச கருடன் கிழங்குடன், 50 கிராம் வெங்காயம், 20 கிராம் சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து விளக்கெண்ணெயை விட்டு வதக்கி இளஞ்சூட்டில் வாதத்துக்குப் பற்று போட்டு வந்தால் வாத வலி குறையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடி உதிர்வு பிரச்சனைகளை தீர்க்கும் அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள் !!