Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல மருத்துவ குணங்களை கொண்ட ஒரு இயற்கை உணவு தேன் !!

பல மருத்துவ குணங்களை கொண்ட ஒரு இயற்கை உணவு தேன் !!
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் இரவு தூங்க செல்லும் முன்பாக ஒரு டீஸ்பூன் தேன் அருந்தி விட்டு தூங்கும் போது, உடலுக்குள் செல்லும்  தேன் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது.

விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது. தேனும், சூடான வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும்.
 
குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை கிடைக்கும்.
 
கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம். வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.
 
இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை அருந்தினால், வாந்தி, குமட்டல்,  ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.
 
தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு  தடுக்கப்படும்.
 
தேன், முட்டை ,பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோயில் சிக்காமல் தப்பலாம்.
 
மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்து தேன். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேய்த்து விட வேண்டும். தினமும் ஒரு ஸ்பூன் தேன் உட்கொண்டு வந்தால் 
மூட்டுகள் வலிக்காது. தேயாது.
 
தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊறவைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
 
தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும். தேனையும் மாதுளம் பழரசத்தையும் சமஅளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பற்கள் மற்றும் எலும்புகளுக்கு உறுதி தன்மையை தரும் அவரைக்காய் !!