Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவ மூலிகைகளில் அற்புத பலன்தரும் மணத்தக்காளி கீரை !!

மருத்துவ மூலிகைகளில் அற்புத பலன்தரும் மணத்தக்காளி கீரை !!
மருத்துவ மூலிகையாக கருதக்கூடிய கீரை வகைகளில் ஒன்று தான் மணத்தக்காளி கீரை. இந்த மணத்தக்காளி கீரையை உண்பதால் ஏற்பட்டும் நன்மைகள் உண்டு.

மணத்தக்காளி கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.
 
மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக இருக்கிறது.
 
மணத்தக்காளி கீரையை அதிகளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றில் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகிறது.
 
உடலின் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் அவசியமாக உள்ளன.
 
மணத்தக்காளி செடியின் இலைகள் சிலவற்றை பறித்து, அந்த இலைகளை நன்றாக கசக்கி சாறு எடுத்து, அந்த சாற்றை காய்ச்சலை போக்க நெற்றியிலும், கை கால்களில் ஏற்படும் வலியை போக்க கை, கால்களிலும் நன்கு தேய்த்து வந்தால் குணம் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ருத்ர முத்திரை செய்வதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள் என்ன...?