Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய்ப்புண்ணை குணப்படுத்த எளிமையான வீட்டு மருத்துவம்!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (11:57 IST)
நம் உடலில் பித்தம் அதிகரித்தல், உடல்சூடு, இரும்புச்சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் வாய்ப்புண்ணை வீட்டில் உள்ள மருத்துவகுணம் கொண்ட பொருட்களை வைத்தே குணமாக்கலாம்.


 
உடல் சூடு, குளிர்ச்சி என பல்வேறு சூழல்களிலும் வாய்ப்புண் ஏற்படுகிறது. இவ்வாறாக ஏற்படும் வாய்ப்புண்ணால் எரிச்சல் ஏற்படுவதுடன், உணவுகளை சாப்பிடும்போது, காரம், உப்பு பொருட்கள் படும்போது எரிச்சல் மேலும் அதிகமாகிறது. இவ்வாறான வாய்ப்புண்களை குணமாக்க எளிமையான வீட்டு மருத்துவ முறைகளை கையாளலாம்

வெயில் காலங்களில் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும் வகையில் அடிக்கடி தண்ணீர் குடித்து வந்தால் வாய்ப்புண் வராது. பாலில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். உடல் குளிர்ச்சி அடையும்.

வாயில் புண் உள்ள இடத்தில் சிறிது வெண்ணெய் அல்லது தேன் தடவி வந்தால் வாய்ப்புண் குணமடையும். தண்ணீரில் நெல்லிக்காய் இலையை போட்டு கொதிக்க வைத்து இளம்சூட்டில் வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் சரியாகும்.

மாசிக்காயை பால் சேர்த்து அரைத்து, தேன் சேர்த்து தடவி வர வாய்ப்புண் நாளடைவில் சரியாகும். மணத்தக்காளி மற்றும் அகத்திக்கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமடையும்.

புதினா இலையை அரைத்து அதன் சாறை புண் உள்ள பகுதியில் தடவி வர வாய்ப்புண் மெல்ல குணமாகும். வாய்ப்புண் இருக்கும் சமயங்களில் அதிக காரமான உணவுகளை உண்பதை தவிர்ப்பது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments