Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 23 April 2025
webdunia

வயிறு செரிமான பிரச்சினையா? இதையெல்லா செய்யாதீங்க; ஒன்று மட்டும் செய்யுங்கள்!

Advertiesment
Is stomach a digestive problem Don't touch this
, வியாழன், 16 நவம்பர் 2023 (13:34 IST)
வயிறு வீக்கம் மற்றும் செரிமான பிரச்சினைகளால் பலர் அவதிப்படுகின்றனர். சரியான நேரத்தில் சரியான உணவை சாப்பிட்டால் இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். அவை என்னவென்று பார்ப்போம்.




நொறுக்குத் தீனிகள், காரமான உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடாதீர்கள்.

திராட்சைப்பழம், அவகேடோ, பெர்ரி, பீச், தக்காளி போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிட வேண்டாம்.

கோதுமை, பழுப்பு அரிசி, ரொட்டி மற்றும் பாஸ்தா ஆகியவற்றைத் தவிர்க்கவும். இவற்றில் உள்ள மாவுத்தன்மை செரிமானத்தை தாமதமாக்கும் என்பதால் ஒவ்வாமை கோளாறுகள் ஏற்படலாம்.

வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் உருளைக்கிழங்கு சாப்பிட வேண்டாம். தக்காளி சட்னி மற்றும் பச்சை மிளகாய் சட்னி சாப்பிட வேண்டாம். இவை செரிமான பிரச்சினையை மேலும் அதிகரிக்கலாம்.

பனீர் மற்றும் வெண்ணெய் தள்ளி வைக்க வேண்டும். பொதுவாக பால் பொருட்களே செரிமானம் ஆக காலம் எடுப்பவை. அதிலும் பனீர், வெண்ணெய் போன்றவை பாலை விட அதிக நேரம் செரிமானம் ஆக கூடியவை.

webdunia


வறுத்த இறைச்சியை சாப்பிட வேண்டாம். வறுத்த இறைச்சியில் உள்ள அதிகமான எண்ணெய் மற்றும் கொழுப்பு செரிமானம் ஆவதை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும்.

பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சாப்பிடக்கூடாது. அவை நெஞ்சு எரிச்சலை அதிகப்படுத்தும்.

செரிமான பிரச்சினைகளை தீர்ப்பதில் தண்ணீருக்கு நிகரான பானம் கிடையாது. தேவையான அளவு தண்ணீர் குடித்தால் அது குடலுக்குள் சென்று செரிமானம் ஆகாத ஆகாரங்கள் செரிமானம் ஆக தேவையான செயல்பாடுகளுக்கு உதவும். எனவே எப்போது செரிமான பிரச்சினை ஏற்பட்டாலும் தண்ணீர் அருந்துவது நல்லது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தக்காளி இல்லாமல் சுவையான ரசம் வைப்பது எப்படி?