Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை நீர் பிரம்மி !!

மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை நீர் பிரம்மி !!
மருத்துவ குணங்களை கொண்ட மூலிகைகளில் நீர் பிரம்மியும் ஒன்று. சித்த மருத்துவத்தில் அதி முக்கியத்துவம் இந்த நீர்பிரம்மிக்கு உண்டு. 

நீர் பிரம்மி செடி முழுவதுமாக பச்சையாக இருக்கும். இதன் இலை உருண்டையாக இருக்கும். இதன் பூ வெள்ளையாக இருக்கும். இனிப்பு சுவை கொண்ட இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. 
 
நீர் பிரம்மி நினைவுத்திறனை அதிகரிக்க செய்யும் வல்லமை கொண்டவை. குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை காலை வேளையில் நீர்பிரம்மி இலை ஒன்றை  சாப்பிட கொடுத்தால் நினைவுத்திறன் அதிகரிக்கும்.
 
நரம்புத்தளர்ச்சி பிரச்சனை இருப்பவர்கள் உணவில் கவனம் செலுத்தினால் பிரச்சனையின் தீவிரம் அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம். இது உடலில் நரம்பு  சம்பந்தமான நோய்களை தடுக்கும் குணம் கொண்டது. நரம்பு இழைகளோடு மூளைப்புறணி கூர்மையாக செயல்படுவதற்கு நீர்பிரம்மி தூண்டுகிறது என்று ஆய்வின்  மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 
 
செரிமானக்கோளாறுகள் இருப்பவர்கள் இஞ்சியை அவ்வபோது உணவில் சேர்த்து வருவதுண்டு. இவர்கள் இஞ்சியோடு நீர்பிரம்மி இலையையும் கலந்து  கஷாயமாக்கி குடிக்கலாம். 
 
நீர் பிரம்மி இலையை எடுத்து சுத்தம் செய்து அதை மைய அரைத்து சாறாக்கி குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு நீங்கும். பெண்கள் தங்களது தொண்டை மென்மையாக இருக்க விரும்பினால் நீர்பிரம்மி இலையின் சாறை குடிக்கலாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ஆண்டின் மிக அதிகமான கொரோனா பாதிப்பு! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!