Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பளீச்சுனு பற்களை பாதுகாக்கும் மூலிகை வைத்தியம்!

Advertiesment
healthy teeth
பளீச்சுனு பற்களை பாதுகாக்கும் மூலிகை வைத்தியம்!
 
பற்களின் எனாமலும் ஈறுகளும் பலமாக இல்லாவிட்டால் பற்களை சுற்றி இடைவெளி அதிகரித்து தாடையும் அகன்றுவிடும். அதுமட்டுமல்லாமல் அதிகமான இனிப்பு பொருட்கள், எளிதில் உணவுளை வேகமாக உட்கொண்டு, வாயை சுத்தமாக கழுவாததாலும் ப்ளூரேட் பற்றாக்குறையினால் பற்கள் எளிதில் சேதமடைகின்றன. 
 
உணவு துகள்கள் பல் இடுக்கில் தங்கி, வாயில் அமில மற்றும் கார சமன்பாட்டை மாற்றுவதால் பல் எனாமல் கெட்டு பற்கள் ஆடி வெளிப்புறமாக சாய்ந்து இடைவெளிகள் அதிகரிக்கிறது. வாயில் தோன்றும் நுண்கிருமிகளை தடுத்து, பல் எனாமலை பாதுக்காக்கும் மூலிகை தான் இரணசிங்கி. 
 
கொல்லிமலை பகுதிகளில் கிடைக்கும் இந்த இரணசிங்கி எடுத்துக்கொண்டு அதனுடன் கடுக்காய்த்தோல், கிராம்பு , உப்பு, ஆகியன வகைக்கு ஒரு பங்கு, 
 
கருவேலம்பட்டை, மாசிக்காய் வகைக்கு 2 பங்கு, ஏலக்காய், சாதிக்காய், சுக்கு வகைக்கு அரை பங்கு எடுத்து உலர்த்தி, பொடித்து, துணியில் சலித்து பல் துலக்கி வந்தால் பல் ஆட்டம், எனாமல் தேய்வு, பற்கூச்சம், பற்சிதைவு ஆகியன நீங்கி பற்கள் நன்றாக ப்ளீச்சினு இருக்கும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பச்சைபட்டாணி கோப்தா செய்வது எப்படி?