Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ வகைகள்...!!

Advertiesment
உடலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ வகைகள்...!!
பலரும் உடல் எடையை குறைக்க பணத்தை செலவழிக்கும்போது நாம் அன்றாடம் சாப்பிடும் மூலிகைகள் கொண்டு ஒரு டீ குடித்தால் போதும், உடல் எடை சரசரவென குறையும். உடல் எடை குறைவதை விட முக்கிய பலன் ஒன்று உள்ளது, அது தான் உடலின் ஆரோக்கியம்.
மூலிகை டீ செய்முறை: தினம் இந்த எளிமையான தேநீர்களில் ஒன்று அருந்தினால் கூட போதும், கிரீம், லோஷன் இல்லாமலே சருமம்  ஜொலிக்கும்.
 
1. இஞ்சி டீ
 
தேவையான பொருட்கள் :
 
இஞ்சி - 2 அங்குலத் துண்டு,
ஏலக்காய் - 2,
பால் - கால் கப்,
பனஞ்சர்க்கரை - ஒரு டீஸ்பூன்.
 
செய்முறை:
 
இஞ்சியைத் தோல் சீவிச் சுத்தம்செய்யவும். ஏலக்காயைத் தட்டி இரண்டையும் ஒரு டம்ளர் நீரில் போட்டுக்கொதிக்கவிட வேண்டும். பாதியாக வற்றியதும், வடிகட்டி, பால், பனஞ்சர்க்கரை சேர்த்துக் கலந்து அருந்தலாம். தினசரி காலையில் பருக ஏற்றது.
 
2. புதினா டீ
 
தேவையான பொருட்கள் :
 
புதினா இலை - 5,
தேயிலை - ஒரு டீஸ்பூன்,
தேன் அல்லது பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன்,
பால் - கால் டம்ளர் (விருப்பப்பட்டால்).
webdunia
செய்முறை:
 
ஒரு டம்ளர் நீரில் புதினா இலை, தேயிலைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பாதியாகச் சுண்டியதும் வடிகட்டி, தேன் அல்லது  பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும். விருப்பப்பட்டால் பால் சேர்க்கலாம்.
 
3. பட்டை டீ
 
தேவையான பொருட்கள் :
 
கிரீன் டீ - 2 டீஸ்பூன்,
பட்டைப்பொடி - கால் டீஸ்பூன்,
தேன் - ஒரு டீஸ்பூன்.
webdunia
செய்முறை:
 
கொதிக்கும் நீரில் கிரீன் டீ, பட்டைப் பொடி சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பின், வடிகட்டி தேன் சேர்த்து அருந்தவும். விருப்பப்பட்டால்,  பால் சேர்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆரோக்கியம் தரும் ஸ்டப்டு பாகற்காய் செய்ய...!!