Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல் கூச்சத்திற்கான முக்கிய காரணங்கள் இவைதான்!!

பல் கூச்சத்திற்கான முக்கிய காரணங்கள் இவைதான்!!
பல் கூச்சம் என்பது ஒரே நாளில் வரக்கூடிய பிரச்னை இல்லை. அது நாம் சரியாக பல்லை பராமறிக்காத போதும், பற்களின் எனாமலில்  பாதிப்பு ஏற்படும்போதும் வரும். குளிர்ச்சியான உணவுகள் பற்களில் படும்போது ஏற்படும் கூச்சத்தை விட, சூடான உணவுகள் படும்போது  ஏற்படும் கூச்சம் ஆபத்தானவை.
பற்களின் உட்புறம் ‘டென்டைன்’ என்று அழைக்கப்படுகிறது. எனாமல் தான் இந்தப் பகுதியை பாதுகாக்கும். எனாமல் பலவீனமாகி உடையும்  போது, சூடாக அல்லது குளிர்ச்சியான எந்த உணவுகளை உண்டாலும் வலி கொடுக்கும். பல் கூச்சமும் அதிகமாக இருக்கும். 
 
சூடான மற்றும் குளிர்ந்த உணவுகள் அல்லது மிகவும் இனிப்பான மற்றும் புளிப்பான உணவுகளை எடுத்துக் கொள்ளும் ஒரு வலி என்று இது குறிப்பிடப்படுகிறது. தீவிர நிலையில் குளிர்ந்த நீர் அருந்தினால் கூட இந்த வலி உண்டாகும்.
 
பல் கூச்சத்திற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று, பற்களின் மேலிருக்கும் எனாமல் அடுக்கு குறைந்து, கூழ் போன்ற மென்மையான பகுதிகளை வெளிப்படுத்தும். இந்த கூழ் பற்களின் உணர் நரம்புகளைக் கொண்டிருக்கும். இந்த பகுதி வெளிப்படும் போது சூடு, குளிர்ச்சி, இனிப்பு புளிப்பு போன்ற உணர்ச்சியை பல மடங்காக பெருகுவதே வலியை வெளிப்படுத்துவதற்கான காரணம்.
 
பற்களின் மேலே உள்ள இடைவெளியானது பாக்டீரியாக்களை உள்ளே செல்ல அனுமதிப்பதுடன், அவை வாயின் உள்ளே சென்று பற்களில்  தொற்றை ஏற்படுத்துகின்றன. இதற்கு சிகிச்சை அளிக்காத போது, இதுவே பெரிய தலை வலியாக மாறும். இதனால் பல் கூச்சம் ஏற்படும்.
 
அதிக அளவு இனிப்பு மற்றும் ஓட்டும் உணவுகள், அமில உள்ளடக்கம் கொண்ட உணவுகள், கோலா போன்ற காற்றூட்டப்பட்ட பானங்கள் மற்றும் மிகவும் குளிர்ச்சியான மற்றும் சூடான உணவுகள் போன்றவை பற்களில் உள்ள எனாமலின் எண்ணிக்கையை குறைத்து பல்  கூச்சத்திற்கு வழிவகுக்கும்.
 
தவறான பற்பசை உபயோகித்தாலும், அதிக ரசாயனம் கலந்த பற்பசைகள் உபயோகித்தாலும், வயதானாலும் இவைகள் ஏற்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மஞ்சளின் மகத்துவமும் அதில் உள்ள மருத்துவமும்!!