Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ள கொய்யா இலை தேனீர் !!

Advertiesment
எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ள கொய்யா இலை தேனீர் !!
பொதுவாக கொய்யா பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. கொய்யா இலை டீயை 3 மாதம் தொடர்ந்து குடித்துவந்தால் உடம்பில் பல்வேறு மாற்றங்கள்  நிகழ்வதை உணரலாம்.


உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை சீராக்கும். மேலும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். 
 
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சேர்க்காமல் குடிக்க வேண்டும். கல்லீரலை சுத்தப்படுத்தும் .இருமல் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் மாறும். பல்வலி,  வாய்ப்புண் போன்றவற்றை விரைவில் குணமாக்கும். மேலும் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
 
கொய்யா இலை தேனீர் குடிப்பதால் வயிற்றுப் போக்கால் அவதிபடுபவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கிறது. இது வயிற்று பிடிப்பைத் தணிக்கும். மேலும் சீக்கிரம் நிவாரணத்தை கொடுக்கும். மேலும் திரவ நிலையில் உள்ள இதை வாய் வழியாக உட்கொள்வதால் இது உடம்பிற்கு தேவையான நீர்ச்சத்தை  தக்கவைக்கிறது.
 
கொய்யா இலை தேனீர் உடல் எடை குறைப்பதையும் ஊக்குவிக்கிறது. கொய்யா இலையில் வைட்டமின் சி, இரும்பு சத்து ஆகியவையும் இருக்கிறது. எனவே  உங்களுக்கு குறைவான காய்ச்சல் இருந்தால் இந்த தேனீரை குடியுங்கள். இது தொண்டை, சுவாச பாதை மற்றும் நுரையீரலில் உள்ள சளியை போக்கும்.
 
சருமத்தில் உள்ள முகப்பரு, வடுக்கள் ஆகியவற்றை போக்குவதற்கும் இந்த கொய்யா இலை சிறந்தது. இதற்கு கொய்யா இலைகளை நசுக்கி அதை பரு மற்றும்  வடுக்கள் உள்ள பகுதிகளில் தடவி பாருங்கள். வித்தியாசத்தை நீங்கள் காணலாம்.
 
தலை முடி அடர்த்தி குறைவு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிபடுபவர்களும் கொய்யா இலையை பயன்படுத்தலாம். கொய்யா இலைகளை ஒரு  பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அந்த நீரை வடிக்கட்டி பொருக்கும் சூட்டில் தலையில் மசாஜ் செய்யலாம்.
 
உங்கள் நரம்புகளையும் மனதையும் அமைதிப்படுத்தி, கொய்யா இலை தேனீர் நல்ல உறக்கத்தையும் தருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குன்றிமணி விதைகளில் உள்ள மருத்துவகுணங்களும் பயன்களும்...!!