Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாழை இலையில் உணவு உண்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!

Advertiesment
வாழை இலையில் உணவு உண்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!
தினமும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வாழை இலையில் உணவு உண்டு வருவது நல்லது. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

நமது உணவினை சில்வர் மற்றும் இதர பாத்திரங்களில் உண்ணும்போது நாளடைவில் நமக்கு பலவித ஆரோக்கிய கோளாறு ஏற்படும். அதுவே நாம் தினமும்  வாழை இலையில் உணவு உண்டு வந்தால் நமது செரிமான மண்டலம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். 
 
நம்மில் பல பேருக்கு அல்சர் மற்றும் வயறு எரிச்சல் போன்ற பிரச்சினை உள்ளது. இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் தினமும் வாழை இலையில் உணவு உண்டு வந்தால் விரைவில் நல்ல மற்றம் காண முடியும்.
 
வாழை இலையில் உணவு உண்டால் உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். வாழை இலையில் உணவு உண்பது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிகவும்  நல்லது. மேலும் இவை சிறுநீரக கற்கள், சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.
 
பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும்  விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
 
காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவி வாழை இலையை மேலே கட்டு கட்டி வந்தால் புண் குணமாகும்.
 
சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
 
சொரியாசிஸ், தோல் அழற்சி, மற்றும் கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையைக் கட்டி வைத்தால் விரைவில் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவைதரும் காளான் 65 செய்ய வேண்டுமா...?