Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் எந்த பரிகாரம் செய்யவேண்டும் தெரியுமா...?

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் எந்த பரிகாரம் செய்யவேண்டும் தெரியுமா...?
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து நுடித்துத் தூய்மையுடன் ஸ்ரீ ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டகம் ஓதவேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை  உண்டாகும்.

கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.
 
குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சிபுரத்தில் உள்ளது. கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான “திருப்புகழ்”  நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர்.
 
அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான். அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன் எனவும், சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன் எனவும் சித்தரிக்கபட்டுள்ளான்.
 
முருகனைக் குறித்துக் “குமார சம்பவம்” என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி காளிதாசர். முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி  எனப் பெயர் பெறும்.
 
முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும். முருகன் அழித்த ஆற்று பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்  ஆகியவை ஆகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவிலின் மூலவர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா....?