Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவ குணங்கள் நிறைந்த தேனில் ஊறிய பூண்டு !!

மருத்துவ குணங்கள் நிறைந்த தேனில் ஊறிய பூண்டு !!
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேன் மற்றும் பச்சை பூண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.


உடலில் போதுமான ரத்த அளவு இல்லாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே விளங்குகிறது. தேன் ரத்தம் விருத்தியடையச் செய்கிறது.
 
தினமும் வெறும் வயிற்றில் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து ஆறுமுறை இதை அரை ஸ்பூன் அளவு சாப்பிடலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் தான் பலன் அதிகம்
 
உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். உடலில் சேர்ந்துள்ள கலோரிகளை எரிக்க உதவும். பூண்டில் அலிசின் என்ற  ஆன்டி ஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதில் பூண்டு முதன்மையானது.
 
டையாலில் சல்பைடு மற்றும் தியாக்ரெமோனோன் ஆகியவை பூண்டில் இருப்பதால் அவை அலர்ஜியால் ஏற்படும் ஒவ்வாமைகளை தடுத்திடும். அலர்ஜியால்  ஏற்படும் சுவாசப் பிரச்சனைகளைக் கூட பூண்டு எளிதாக தீர்க்கிறது.
 
நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத்  தனித்தனியாகப் பிரித்து, உடல் முழுவதும் அனுப்புகின்றன. இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக  நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பச்சை மிளகாயில் என்னவெல்லாம் சத்துக்கள் உள்ளது தெரியுமா...?