நீரிழிவு நோயாளிகள் தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். மேலும் ஆய்வுகளிலும் வெந்தயத்தை சாப்பிடுவதால் டைப்-2 நீரிழிவு பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வு கிடைப்பதாக தெரிய வந்துள்ளது.
மாரடைப்பு வெந்தயம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது மாரடைப்பினால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுவதைத் தடுத்து நல்ல பாதுகாப்பு வழங்கும். இதற்கு வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.
புற்றுநோய் ஆய்வுகளில் வெந்தயத்தில் உள்ள சக்தி வாய்ந்த சத்துக்கள், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவதாக தெரிய வந்துள்ளது. எனவே உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள்.
உடல் சூடு கோடையில் உடலில் அதிகம் சூடு பிடிக்கும். இதனைத் தடுக்க தினமும் காலையில் வெந்தயத்தை சாப்பிட வேண்டும். இதனால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடல் சூடு பிடிப்பது தடுக்கப்படும்.
செரிமானம் செரிமான பிரச்சனைகள் ஏதும் நேராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதனால் செரிமான கோளாறுகள், வாய்வுத் தொல்லை போன்றவை நீங்குவதோடு, மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்றவைகளும் தடுக்கப்படும்.
எடை குறையும் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.
சிறுநீரக செயல்பாடுகள் வெந்தயத்தில் உள்ள பாலிஃபீனோலிக் ஃப்ளேவோனாய்டுகள், சிறுநீரகங்களின் செயல்பாட்டை அதிகரித்து, சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும். எனவே சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிடுங்கள்.