Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பயன்தரும் மருத்துவ குறிப்புகள்...!!

Advertiesment
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பயன்தரும் மருத்துவ குறிப்புகள்...!!
நீரிழிவு நோயாளிகள் உடம்பில் அதிகம் நீர்ச்சத்து இழக்காமல், தண்ணீர் தாகம் அதிகம் இல்லாமல், நாவு வறட்சி இல்லாமல் இருக்க கவனம்  செலுத்த வேண்டும். நாம் கீழே குறிப்பிட்டுள்ள உணவுகளை எல்லாம் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
ஆவாரம்பூ, சுக்கு, ஏலக்காய் இவற்றை தொடர்ந்து கொதிக்கவைத்து கசாயமாக சாப்பிடும்பொழுது சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும். இது மிக எளிமையான வழிமுறை ஆகும். 
 
தேநீர் சாப்பிடக் கூடிய அதே சுவை இதிலேயும் இருக்கும். ஆவாரம்பூ தேநீர் சாப்பிட்டுப் பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். இன்னும்  சர்க்கரை நோய்க்கு சிறுகுருஞ்சான், நாவல் கொட்டை, மருதம்பட்டை, வேப்பம்பட்டை இவற்றை சம அளவு கலந்து, பொடி செய்து  வைத்துகொண்டு காலை, இரவு நேரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலன் இருக்கும்.
 
நாம் உணவில் நிறைய பிஞ்சுக் காய்கறிகளான முருங்கைப் பிஞ்சு, பீர்க்காய்ப் பிஞ்சு , புடலங்காய்ப் பிஞ்சு, பீன்ஸ், அவரை இவை அனைத்தையும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வாருங்கள். இன்று இருக்கும் அலோபதி மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளிடம் கேரட்  சாப்பிடாதீர்கள் என்று கூறுகிறார்கள். இது தவறான ஒன்றாகும்.
 
இளநீரில் அத்தனை கால்சியமும் இருக்கிறது. அச்சத்தில் புண்களை ஆற்றக் கூடிய தன்மை இருக்கிறது. ஒரு தட்டுச் சாப்பாட்டில் இருக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட்ஸ் இளநீரில் கிடையாது.
 
இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அந்த வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிடுவதால், சர்க்கரை முழுமையாகக் கட்டுப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது. அதே மாதிரி மருதம் பட்டையைக் கசாயம் செய்து தொடர்ந்து சாப்பிடும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
 
நீரிழிவால் வரக்கூடிய கால் புண்ணானது குழிப் புண்ணாக மாறிவிடும். அந்தப் புண்ணுக்கு ஆங்கில மருத்துவத்தில் டின்ஜர், டெட்டால், மற்றும் சில மருந்துகளையும் சேர்த்து குணப்படுத்துகிறோம் பேர்வழி என்று சொல்லி, பிறகு காலையே வெட்டக் கூடிய ஒரு நிலை வருகிறது. இதற்கு  ஆவார இலையை அவித்து அந்த புண்ணில் வைத்து கட்டி வந்தால், ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் அப்புண் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த வில்வம்....!!