Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த வில்வம்....!!

Advertiesment
அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த வில்வம்....!!
வில்வம் பழச் சதையை வெயிலில் உலர்த்தி நன்றாகத் தூளாகும்படி அரைத்து வைத்துக் கொண்டு அதில் மூன்று கிராம் அளவு எடுத்து  சர்க்கரை சேர்த்து உள்ளுக்கு சாப்பிட சீதபேதி குணமாகும். காலை நண்பகல், மாலை என மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
அன்றாடம் காலையில் 20 மிலி வில்வ இலைச்சாறு பருகுவதால் ரத்தத்தில் கலந்த அதிகமான சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில்  வைத்திடவும், அதி மூத்திரம் அல்லது வெகு மூத்திரம் என்கிற சிறுநீர்த் தொல்லைகளினின்று விடுதலை பெறவும் உதவும்.
 
உலர்ந்த வில்வ இலைகளைச் சூரணித்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நீரிலிட்டு நன்கு காய்ச்சி வடித்து எடுத்துக் கொண்டு அந்தி சந்தி என  தினம் இரண்டு முறை பருகி வருவதால் உயர் ரத்த அழுத்தம் தணியும்.
 
அன்றாடம் இரவு உணவுக்குப் பின் நன்கு பழுத்த வில்வப் பழச் சதையை, ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து அதனோடு சிறிது தேன் கலந்து  சாப்பிட்டு வருவதால் ஆரம்பகால புற்றுநோய் மற்றும் காசநோய் ஆகியன குணமாகும். குறைந்தது ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு  வருவது நலம் பயக்கும்.
 
வில்வ இலைச் சூரணம் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேன் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வருவதால் பசியின்மையைப்  போக்கும். பசி தூண்டப் பெறும்.
 
வில்வப் பழச் சதையை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவு சூரணத்தை எடுத்து தேன் அல்லது வெந்நீர் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை என இரண்டு அல்லது மூன்று நாட்கள் சாப்பிட்டு வர குடலில் தங்கி குற்றம் விளைவிக்கும் புழுக்கள் வெளியேறி  ஆரோக்கியம் நிலைபெறும்.
 
வில்வ இலைகளை அரைத்து விழுதாக்கி 5 கிராம் அளவுக்கு எடுத்து அதனோடு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அந்தி சந்தி என அன்றாடம்  இருவேளை சில நாட்கள் சாப்பிட்டு வர ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பு நோய் குணமாகும்.
 
இளம் வில்வ இலைகளை 10 அல்லது 15 கிராம் அளவு எடுத்து அதனுடன் 10 மிளகு சேர்த்து உறவாடும்படி அரைத்து அந்தி சந்தி என இருவேளை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரும அழகை மேம்படுத்தும் ஃபேஸ் டைட்னிங் பேஷியல்...!!