Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எந்த நோய்களுக்கெல்லாம் செவ்வாழை மருந்தாகிறது தெரியுமா...!

Advertiesment
எந்த நோய்களுக்கெல்லாம் செவ்வாழை மருந்தாகிறது தெரியுமா...!
செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையில், மற்ற வாழைப்பழங்களை விட, கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், தினமும் காலையில் ஒரு செவ்வாழைப் பழத்தை உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம்  எடுக்காமல் இருக்கும். 
இப்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் ரத்த அணுக்களின் அளவை சீராக பராமரிக்கும். சிறுநீரகப் பிரச்னைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால், தினம் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவது நல்லது. 
 
குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
 
செவ்வாழையில், பொட்டாசியம் அதிகம் உள்ளது. சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும். உடலில், கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும். 
 
கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை  பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
 
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்  நோய் குணமாகும்.
 
பல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
 
21 நாட்கள் செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் நலம் பெறலாம். சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு தீர்வு  கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் நாட்டுச் சர்க்கரை...!