உடலை பொலிவாகவும், பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் வைத்திருக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் உணவில் சில பொருட்கள் மூலமாகவே பொலிவான சருமத்தை பெற முடியும். அதுகுறித்து காண்போம்.
-
தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது சருமத்திற்கு நல்லது.
-
பழச்சாறுகளை அதிகம் குடித்து வந்தால், சருமம் பொலிவடையும்.
-
ஊறவைத்த பாதாமை அதிகாலையில் உட்கொள்வது சரும வறட்சியைத் தடுக்கும்.
-
தேனை தொடர்ந்து உட்கொள்வது சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
-
வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயால் தோலை முழுவதும் மசாஜ் செய்யவும்.
-
கற்றாழையை வாரத்திற்கு இரண்டு முறை சருமத்தில் தடவினால் பலன் கிடைக்கும்.
-
எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து சருமத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
-
பப்பாளி, வாழைப்பழம், கொய்யா, ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடுவது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.
-
இளநீர் அடிக்கடி குடிப்பதால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாது.
-
வைட்டமின் சி உள்ள எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் போன்ற புளிப்பு பழங்களை உட்கொள்வது சருமத்தைப் பாதுகாக்கும்.