நாவல் மரம் காடுகளில் எளிதாக வளரக்கூடியது. சிறிது துவர்ப்பு சுவையுடன் கூடிய நாவல் பழம் ஏராளமான சத்துக்களையும், மருத்துவ பயன்களையும் கொண்டுள்ளது. நாவல் பழத்தின் நன்மைகள் குறித்து அறிந்து கொள்வோம்.
-
நாவல் பழத்தில் கால்சியம், விட்டமின் பி1, பி2, பி5 சத்துக்கள் அதிகமாக உள்ளது.
-
நாவல் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கங்கள் மறைந்து பொலிவு பெறும்.
-
நாவல் பழம் சாப்பிடுவது வயிற்றில் உள்ள புண்களை குணப்படுத்தி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
-
நாவல் பழத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
-
வெண்புள்ளி, அரிப்பு உள்ளிட்ட தோல் சார்ந்த நோய்களை சரிசெய்யும் தன்மை நாவல் பழத்திற்கு உண்டு.
-
நாவல் பழத்தில் செய்யப்பட்ட வினிகரை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள் தீரும்.
-
நாவல் மர இலையை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிட்டால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை அகலும்.