எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆளி விதை !!

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (17:16 IST)
ஆளி விதையில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மார்பகம், புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.


ஆளி விதைகள் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இதனை சரியான அளவில் சாப்பிட வேண்டும். அதிகம் பசி எடுக்காது. ஆளி விதையில் 20 சதவீதம் புரதச் சத்து நிறைந்துள்ளது. இது உடல் எடையை எளிதில் குறைப்பதற்கு உதவுகிறது.

ஆளி விதையில் லிக்னன்ஸ் என்ற ஆன்டிஆக்சிடன்ட் அதிகளவில் உள்ளது. இது உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்து தருகிறது. செல்களின் செயல்பாட்டை அதிகரித்து தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது.

பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு காரணமாக ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு ஆளிவிதை சிறந்த மருந்து. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வது குறையும்.

ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம். அல்லது பொடியாக்கி உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம். ஆளி விதையில் உள்ள வைட்டமின் ஈ, சரும ஆரோக்கியம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments