Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் ஆடா தொடை மூலிகை !!

மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் ஆடா தொடை மூலிகை !!
, சனி, 26 மார்ச் 2022 (14:51 IST)
ஆடாதொடை இலை 10 எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து 2 வேளை 48 நாட்கள் குடித்து வர, என்புருக்கி காசம் இரத்த காசம், சளிக் காய்ச்சல், சீதளவலி, விலாவலி நீங்கும்.


ஆடாதொடை வேருடன், கண்டங்கத்திரி வேர் சமஅளவு எடுத்து இடித்துப் பொடியாக்கி 1 கிராம் எடுத்து தேனில் கலந்து, 2 வேளையாக தொடர்ந்து சாப்பிட்டு வர, நரம்பு இழுப்பு, சுவாசகாசம், சன்னி, ஈளை, இருமல், சளிக் காய்ச்சல், என்புருக்கி, குடைச்சல் வலி குணமாகும்.

ஆடாதொடை இலையையும், காய்கள் இலைகளையும் வகைக்கு 1 கைப்பிடியளவு எடுத்து அரைத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளையாகக் குடித்து வர, கரப்பான், குட்டம், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி குணமாகும்.

ஆடா தொடை இலைச் சாறும் தேனும் சம அளவாக எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் நான்கு வேளை குடித்து வர, நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை குணமாகும். இது அளவில் குழந்தைகளுக்கு ஐந்து சொட்டும், சிறுவர்களுக்கு பன்னிரண்டு வயது வரை பத்துச் சொட்டும் பெரியவர்களுக்கு பதினைந்து சொட்டும் அளவாக கொடுத்தால் போதும்.

ஆடாதொடை இலைச்சாறு 2 தேக்கரண்டி எடுத்து எருமைப்பால் 1 டம்ளரில் கலந்து 2 வேளை குடித்து வர, சீத பேதி, இரத்த பேதி குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்றாட உணவில் சின்ன வெங்காயம் சேர்த்துக்கொள்வதால் என்ன நன்மைகள்...?