Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அன்றாட உணவில் சின்ன வெங்காயம் சேர்த்துக்கொள்வதால் என்ன நன்மைகள்...?

அன்றாட உணவில் சின்ன வெங்காயம் சேர்த்துக்கொள்வதால் என்ன நன்மைகள்...?
, சனி, 26 மார்ச் 2022 (13:19 IST)
வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.


சின்ன வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

நாலைந்து சின்ன வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

சமஅளவு சின்ன வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும். சின்ன வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

சின்ன வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட  எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

சின்ன வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட  உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

சின்ன வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு  தணியும்.

சின்ன வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருங்காலி மரத்தின் மருத்துவ குணங்களும் பயன்களும் !!