நோய்களை தீர்க்கும் விரல் முத்திரைகளும் அதன் அற்புத பயன்களும்...!!
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது இந்த பிரபஞ்சம். இதில் ஓர் அங்கமாக விளங்கும் நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது காரணம் மனிதனின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன.
இந்த ஐந்து மூலங்களும் உடலில் சம நிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும். கட்டை விரல் - நெருப்பையும், சுட்டுவிரல் - காற்றையும், நடுவிரல் - ஆகாயத்தையும், மோதிர விரல் - நிலத்தையும், சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன.
ஞாபகசக்தி
தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு தியானம் செய்வார்கள் இதே நிலையில் இருபது நிமிடங்கள் கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம் முதலியவை அதிகரிக்கும். தூக்கமின்மை, டென்ஷன் முதலியவை அகலும். மன அமைதி கிடைக்கும்.
மூட்டு வலி
மூட்டுவலி, இரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள், சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்துக் கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி வைத்துக் கொள்ளவும். இதன்படி தியானம் செய்தால் வலிகள் குணமாகும்.
இரத்த சுத்தம்
இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் இது போல வைத்துக் கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாகும்.
கொழுப்பு கரைய
உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.
அடுத்த கட்டுரையில்