உலர் பழங்களுக்கு கலோரிகள் அதிகம். மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தர விட்டமின்கள், மினரல்கள் இவற்றில் நிறைய உள்ளன. உலர் பழங்கள் வெகு எளிதில் செரிமானமாகக் கூடியவை. ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. பலவீனமானவர்கள் உலர் பழங்கள் உண்டால் விரைவில் இயல்பான ஆரோக்கியத்தை அடையலாம்.
உலர் பழங்களில் உள்ள இனிப்பு தனித்துவமான சுவை கொண்டது. நாவிற்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது. உலர் பழங்களை உண்பதை பழக்கமாக கொண்டால் உடல் சக்தி அதிகரிக்கும். உலர் பழங்கள் தோல் சுருக்கங்களை நீக்கிச் சருமத்தை காக்கக்கூடியவை. மலச்சிக்கலை போக்க வல்லது. அதுமட்டுமல்ல நினைவாற்றலையும் பெருக்கும். இதயத்திற்கும் நல்லது.
நட்ஸ் சாப்பிட சரியான நேரம் காலை நேரமாகும். இந்த நேரத்தில் சாப்பிட்டால் அதிகப் பலனைப் பெறலாம். நட்ஸ் மூலம் அதிகப்படியான பலன்களை பெற, ஒரு கிளாஸ் தண்ணீருடன் ஒரு கைப்பிடி ஊறவைத்த நட்ஸ்களையும் உட்கொள்ள வேண்டும். அக்ரூட் பருப்புகள், பாதாம் அல்லது நீங்கள் விரும்பும் நட்ஸ்களின் கலவையை நீங்கள் உட்கொள்ளலாம்.
உலர் பழங்களில் உடலுக்கு அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கும் சில சேர்மங்கள் உள்ளன. உலர்ந்த திராட்சை புரதச்சத்தும் நிறைந்தது. வேர்க்கடலையில் நார்ச்சத்தும் பேரீச்சம்பழத்தில் தாதுச்சத்தும் நிறைந்துள்ளன.
ஊறவைத்த பருப்புகள் ஆற்றலை அதிகரிக்கும். இது ஹார்மோன் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது நினைவாற்றலைக் கூர்மைப்படுத்துகிறது.