சிறுதானியங்கள் உடலுக்கு வலுவூட்டக் கூடியவை ஆகும். அதில் முக்கியமானதாகவும் முதன்மையானதாகவும் சாமை விளங்குகின்றது. சாமையில் அதிகப்படியான கால்சியம் உள்ளது. இதனால் எலும்புகள் வலு பெறுகின்றன. மேலும் உடலின் தசைகளையும் வலிமை பெறச் செய்கிறது.
மாரடைப்பு வராமல் தடுக்கும். சாமை உடலுக்கு நன்மை தரும் கொழுப்புகளை உள்ளடக்கியுள்ளது. இதனால் இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து பாதுகாத்து, மாரடைப்பு வராமல் தடுக்கும். இரத்த சோகையைக் குணப்படுத்தும். சாமையில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாக அமையும்.
ஆஸ்துமா போன்ற நுரையீரல் தொந்தரவுகளை சீர்செய்ய உதவும். இதற்கு சாமையை உணவாக எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். சாமையில் உள்ள ஃபோலிக் அமிலம், மூளை வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் உருவாகாமல் தடுக்கும்.
உடல் பலத்தைப் பேணும். இதில் உள்ள புரதச்சத்து மற்ற தானியங்களை விட அதிகம் என்பதால் குழந்தைகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் சாமைச் சோறு, சாமை இடியாப்பம், சாமை புட்டு, சாமை ரொட்டி, கேக், பிஸ்கட் என்று பலவிதமாக செய்து கொடுத்தால் பலன் கிடைக்கும்.
எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்மந்தமான நோய்களைக் குணமாக்க உதவுகின்றது. சாமையில் உள்ள இயற்கையான சுண்ணாம்பு சத்தானது எலும்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வாகுவதுடன் எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகள் வலிமை பெறவும் உதவுகிறது.
மலச்சிக்கலைப் போக்கும் சாதாரண அரிசியை விட நார்ச்சத்துக்கள் ஏழு மடங்கு அதிகம் உள்ளது. இதன் காரணமாக மலச்சிக்கலை சீர்செய்ய உதவும். சக்கரை நோயைக் குணப்படுத்தும். சாமையில் உள்ள நார்ச்சத்தானது சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க பெரும் உதவியாக இருக்கிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாமை அரிசியை சமைத்து உண்டால் நன்மை கிடைக்கும்.