கருப்பு கவுனி அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து, ஊட்டச்சத்து மற்றும் இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்ற சக்தியையும் கொண்டிருக்கிறது.
கருப்பு அரிசியில் வைட்டமின் இ உள்ளதால் தோல் மற்றும் பார்வை சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
கருப்பு அரிசியில் ஆன்டிஆக்சிடன்ட் அதிகளவில் உள்ளது. இதனால் சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய்கள், உடல் எடை அதிகரிப்பு, கெட்ட கொழுப்பு போன்றவைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். அதிக நார்ச்சத்து உள்ளதால் செரிமான பிரச்சினை மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகும். மேலும் இரும்புச்சத்தும் இருப்பதால் நரம்புகளுக்கும் வலுவை கொடுக்கிறது.
கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து LDL என்ற கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் இருதய பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கிறது.
கருப்பு கவுனி அரிசியில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைப்பதால். இதயத்தின் ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தவிர்க்கிறது. இதனால் இதயம் பாதுகாக்கப்படுகிறது.
கருப்பு கவுனி அரிசியில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுவதோடு, உடலுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.
ரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிக்க டயாபடீஸ் என்னும் குறைபாடு வரக்காரணம். கருப்பு கவுனி அரிசி உள்ள நார்சத்து, அந்தோசினனின், போன்றவை சர்க்கரை நோய்யை காட்டுக்குள்ள வைக்க உதவு கிறது.