Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாதுச்சத்துக்கள் மிகவும் அதிகமாக உள்ள கீரை எது தெரியுமா...?

Advertiesment
தாதுச்சத்துக்கள் மிகவும் அதிகமாக உள்ள கீரை எது தெரியுமா...?
புளிச்ச கீரை உடல் வலிமையை பெருக்குவதில் முதன்மையானது. உடல் நலம் இல்லாது தேறியவர்கள், பலவீனமாக இருப்பார்கள். அவர்கள் அடிக்கடி புளிச்ச கீரையை சாப்பிட்டால் உடல் நலமாகும். 

இந்தக் கீரையில் உயிர்ச் சத்துக்கள் குறைவாக இருந்தாலும் தாதுச் சத்துக்கள் மிகவும் அதிகமாக உள்ளது. தோல் நோய் குணமாக, காசநோய் குணமாக, உடல் உஷ்ணத்தை குறைக்க, மலச்சிக்கல் குணமாக, வாதநோய் குணமாக, உடல் உஷ்ணம் போன்ற சரும நோய்கள் உள்ளவர்கள் சட்னி செய்து உணவுடன் இதனைச் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
 
உடலில் ஏதாவது ரணம் இருந்தாலும் சொறி, சிரங்கு இருந்தாலும் அதற்கு மருந்து போட்டுவரும் சமயம் தினசரி புளிச்சக் கீரையைச் சமைத்துச் சாதத்துடன் சேர்த்துக் கொடுத்து வந்தால் இரணம், சிரங்கு இவைகள் சீக்கிரமே ஆறிவிடும்.
 
புளி, காரம் சேர்க்காமல் வதக்கி சட்னி செய்து சாப்பிட்டால் தாதுவிருத்தி செய்யும், உடல் உஷ்ணத்தைச் சீராக வைத்திருக்க உதவும்.
 
மலச்சிக்கலினால் கஷ்டப்படுகிறவர்கள் இந்தப் புளிச்சக் கீரையை இரண்டு, மூன்று தினங்களுக்கு ஒரு முறையாவது சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலே ஏற்படாது. மலம் தினசரி சரளமாகக் கழியும்.
 
இக்கீரையை உட்கொண்டு வர இரத்தம் தூய்மைப் பெறும். மலச்சிக்கல் துன்பம் ஏற்படாது. மந்தம் நீங்கும். விந்து வானது கெட்டிப்படும்.
 
வாத நோயுள்ளவர்களுக்கு இரண்டு, மூன்று தினங்களுக்கு ஒருமுறை புளிச்சக் கீரையைச் சமைத்துக் கொடுத்து வந்தால் வாதநோய் தணிந்து விடும்.
 
சிலரது தேகம் அடிக்கடி சில்லிட்டு விடுவதுண்டு. இப்படிப்பட்டவர்கள் புளிச்சக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடல் உஷ்ணம் இயற்கையான அளவில் இருந்துவரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்து பகுதிகளுமே மருத்துவத்திற்கு பயன்படும் முருங்கை !!