Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனைத்து பகுதிகளுமே மருத்துவத்திற்கு பயன்படும் முருங்கை !!

அனைத்து பகுதிகளுமே மருத்துவத்திற்கு பயன்படும் முருங்கை !!
, திங்கள், 13 டிசம்பர் 2021 (17:01 IST)
கீரையில் நிறைய வைட்டமின் உயிர்ச்சத்துக்கள் இருப்பதால், அது உடலை நன்றாக வளரச் செய்யும். எலும்புகளுக்கும், பற்களுக்கும் நல்ல எல்லா பலத்தைத் தரும்.

கண் சம்பந்தமான கோளாறுகளையும் குணப்படுத்தும். பித்த சம்பந்தமான எல்லா வியாதிகளையும் முருங்கை கீரை பூரணமாகக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.
 
முருங்கை வியத்தகு பயனை அளிக்கக் கூடியதாகும். இது மர வகையைச் சார்ந்ததாகும். இதன் பூக்கள் இளமஞ்சள் அல்லது வெள்ளை மத்தில் கொத்துகொத்தாகப் பூக்கும். இதன் காய்கள் நீளமாக இருக்கும்.
 
பொதுவாக எல்லாரும் முருங்கைக் கீரையையும், முருங்கைக் காயையும் சமையலில் சேர்த்துக் கொள்வது வழக்கம். ஆகையால் முருங்கையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது.
 
முருங்கையின் இலை, பூ, காய், விதை, வேர், பட்டை என அனைத்துமே மருத்துவத்திற்குப் பயன்படுகின்றன.
 
இதில் கால்சியம், இரும்பு, வைட்டமின் B, வைட்டமின் B2, வைட்டமின் C ஆகிய சத்துகள் அடங்கியுள்ளனன. இந்தக் கீரையை சமையலில் வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டுவந்தால் இரும்புச் சக்தி குறைபாடுகளினால் ஏற்படக்கூடிய நோய்கள் குணமாகும். அத்துடன் பெண்களுக்கு வரும் சோகை, காமாலை, உப்புச் சத்துக் குறைபாடு போன்ற நோய்களும் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர் இருமலை குணமாக்கும் அற்புத மருந்து எது தெரியுமா....?