Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுரையீரலில் உள்ள சளியை நீக்க உதவும் மூலிகை எது தெரியுமா...?

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (14:03 IST)
ஆடாதோடைக்கு ஆட்டுசம், வைத்தியமாதா, வாசாதி, வாசை தோடை, சிங்கம், நெடும்பா, ஆடாதோடை போன்ற வேறு பல பெயர்களும் உண்டு.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும். நுரையீரலைப் பலப்படுத்தும் சிறந்த மருந்தாக ஆடாதோடை விளங்குகிறது. 
 
நுரையீரலில் உள்ள சளியை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதை மரணமாற்று மூலிகை என்றும் கூறுகின்றனர்.
 
நெஞ்சில் சளி, அதனுடன் உடல்வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுத்தால் உடல்வலி பறந்தோடும். 
 
ஆடாதோடை இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவிட்டு, பின்பு வடிகட்டி தேன் சேர்த்து கொடுத்து வந்தால் ஆஸ்துமா, இருமல், சுரம் போன்றவை குணமாகும்.
 
ஆடாதோடை வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரில் போட்டு காய்ச்சி அதனுடன் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க இருமல் தீரும். இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.
 
ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, மஞ்சள் காமாலை போன்றவை குணமாகும். ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடி போல செய்து தினமும் காலை வேளைகளில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments