Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சளி -இருமலை குணமாக்கும் தூதுவளை

Advertiesment
சளி -இருமலை குணமாக்கும் தூதுவளை
, வியாழன், 6 ஜனவரி 2022 (23:56 IST)
தூதுவளை உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும் பூ இதை உட்கொண்டால் உடல் பெருக்கும். ஆண்மை பெருகும் வலுமை கிடைக்கும். தூதுவளை காயை உலர்த்தி தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் நோய்கள் தீரும். அழற்சி தீரும். வாயு தொந்தரவு தீரும்.
 
தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளைக் கீரையை  பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
 
வாதம் மற்றும் பித்தத்தால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த மிளகு கல்பகம் 48 நாட்கள் சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48  நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத, பித்த நோய்கள் தீரும்.
 
தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து ஒரு  மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத்  தூண்டும்.
 
தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல், நமைச்சல்  பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்தாகும்.
 
மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்து.  தூதுவளைக் காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒரு மண்டலம் கற்பக முறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான  பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய் நீங்கும்.
 
தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும். தூதுவளை பழத்தை  வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல், நீங்கும். பாம்பின் விஷத்தை முறிக்கும்.
 
தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல், கண் நோய்கள்  நீங்கும். தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.
 
தூதுவளையின் பழம் இறுகிய சளியை நீக்கும். இருமல் மற்றும் பாம்பின் நஞ்சு நீக்கும். தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று  நோய் வராமல் தடுக்கலாம். திண்டைப் புற்று கருப்பை புற்று வாய்ப்புற்று ஆகியவற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன்  கொடுத்துள்ளது.
 
ஆஸ்துமா நோயாளிகள் காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால். ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முசுமுசுக்கை இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!