Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெந்நீர் குடிப்பதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டாகும் தெரியுமா...!

Advertiesment
வெந்நீர் குடிப்பதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டாகும் தெரியுமா...!
வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகிறது.


வெந்நீருடன் சிறிது எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக்  கொண்டால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்.
 
பருக்கள் படாதபாடு படுத்தும். எண்ணெய் மற்றும் தூசுகள் படிவதால்தான் பெரும்பாலும் பருக்கள் உருவாகின்றன. இந்தப் பருக்களை விரட்ட தொடர்ந்து வெந்நீரைக் குடித்து வாருங்கள். முகமும் பொலிவடையும்.
 
அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி, மேலும் முடிகள் வளர வழி வகுக்கும்.
 
நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால், அது பலவிதமான உடல் நலக் குறைவுகளை ஏற்படுத்தும். ஆனால், வெந்நீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். மேலும் நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களும்  வெந்நீரில் கரைந்து விடும்.
 
இரத்த ஓட்டத்தைப் போலவே குடல் இயக்கமும் சரியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். மலச்சிக்கலும் நீர்ச்சத்து குறைவும் குடல் இயக்கத்துக்கு முக்கிய எதிரிகள். மிதமான சூட்டில் நீரை தினமும் காலையில் காலி வயிற்றில் குடித்து வந்தால், குடல்  இயக்கம் அதிகரிக்கும்.
 
தினமும் காலையில் மிதமான சுடுநீரைக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொழுப்புக்கள் சரசரவென்று குறைந்து, எடையும் குறையும். ஒரு சொட்டு எலுமிச்சை சாற்றையும் சுடுநீருடன் சேர்த்துக் கொண்டால் அது உடம்பில் மேலும் கொழுப்பு சேர விடாமல் தடுக்கும்.
 
மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிப்படுவார்கள். அந்த சமயங்களில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும்.
 
உடலிலும் சருமத்திலும் தேவையில்லாமல் இருக்கும் நச்சுப் பொருட்கள் தான் விரைவில் வயதான தோற்றம் உருவாவதற்கு காரணம். வெந்நீர் குடிப்பதால் அத்தகைய நச்சுப் பொருட்கள் விரைவில் வெளியேறிவிடும். இதனால் வேகமாக வயதாவது குறையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாய்வுத் தொல்லை ஏற்பட முக்கிய காரணங்களும் தீர்வுகளும்...!!