நாம் அன்றாட குளிக்கும்போது வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சேர்த்து குளித்து வர உடலில் உள்ள தோல் சம்பந்தமான அனைத்து நோய்களும் சரியாகிவிடும்.அதிலும் குறிப்பாக சொறி சிரங்கு உள்ளவர்கள் இவ்வாறு செய்து வந்தால் தோலில் உள்ள கிருமிகள் அழிந்து தோல் பிரச்சனைகள் குணமாகும்.
வெள்ளை வினிகரை நீரில் சரியாக கலந்து காட்டனில் நனைத்து முகத்தைத் துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப் பசை நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.
தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய்யை உடம்பில் தடவி பிறகு கடலைமாவுடன் கற்றாழையைக் கலந்து தடவி குளித்து வர உடல் பளபளக்கும்.
துணி சோப்புகளை நேரடியாகப் பயன்படுத்தாமல், கைகளில் ஹேண்ட் க்ரீம் தடவிக்கொண்டோ, காட்டன் கிளவுஸ் அல்லது பிளாஸ்டிக் கிளவுஸ் போட்டுக்கொண்டோ சலவை வேலைகளைச் செய்யலாம்.
கால்கள் சோர்வாக இருந்தால் ஒரு பக்கட் தண்ணீரில் கல் உப்பு, ப்ரூட் சால்ட் தலா ஒரு ஸ்பூன் மற்றும் ரோஜா இதழ்கள் அல்லது ரோஸ் வாட்டரைக் கலந்து பாதங்களை அதில் வைத்தால், கால் நகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். கால்களுக்கு புத்துணர்வூட்டும். பின் ஷாம்பு போட்டு கால்களைக் கழுவி பாடி லோஷன் தடவினால் மிருதுவாகும்.
மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும். சோளமாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தின் எண்ணெய் பசை நீங்கும்.
அடிக்கடி உப்பு நீரில் குளித்து வருவது நல்லது. ஏனெனில் உப்பு நீர் ஆண்டிசெப்டிக், ஆண்டி பாக்டீரியாவாக செயல்படும். மேலும் இவ்வாறு தண்ணீரில் உப்பு சேர்த்து குளிப்பதால் சருமத்தில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகளும் குணமாகும்.